Monday, May 16, 2011

படித்ததில் பிடித்தது‍

1971ஆம் ஆண்டு...................

பொதுத்தேர்தல் முடிந்து‍ முடிவுகள் வந்து‍ விட்டன.

தமிழகம் காமராஜை இரண்டாவது‍ முறையும் ஏமாற்றி விட்டது.

இந்திய அரசியலில் இனி இந்திரா காந்தியா?  காமராசரா?   எனற் கேள்விக்கு‍ இந்திராவே என்ற பதில் கிடைத்தது.

காமராஜை தோற்கடிக்க இந்திராவுக்கு‍ கருணாநிதி துணை நின்றார்.

ஸ்தாபன காங்கிரஸ், சுதந்திரா கட்சி, ஜனசங்கம்  மூன்றும் கூட்டணி அமைத்துத்‌ தேர்தலில் போட்டியிட்டன.

1967இல் கழகத்துடன் நின்ற ராஜாஜி 1971ல் காமராசரோடு‍ கை கோர்த்து‍ நின்றார்.

நீண்டகால அரசியல் பகைவர்களான காமராசரும் ராஜாஜியும் ஒரே மேடையில் தோன்றி முழக்கமிட்ட மெரினா கடற்கரைக் கூட்டத்தில் சென்னை நகரமே திரண்டு‍ நின்றது.

எதற்கும் மயங்காத காமராசரே அன்று‍ கூடிய கூட்டத்தில் மயங்கினார்.

இரகசிய போலீஸ் காமராசர் கோட்டையில் அமர்வது‍ நிச்சயம் என்று‍ கருணாநிதிக்குக் குறிப்பு அனுப்பியது.

நாளை என்னைக் கோட்டையில் சந்தியுங்கள் - என நிருபர்களிடம் காமராஜ் உறுதியாக உரைத்தார்.

ஆனால் இந்தியா முழுவதும் இந்திரா காங்கிரஸ் பெரு‍ வெற்றி பெற்றது.

தோல்வியை ஜீரணிக்க முடியாத வாஜ்பாய் போனற் பெரிய தலைவர்கள் அனைவரும் இந்திரா காங்கிரஸ் வெற்றிக்கு‍ ரஷ்ய மையே காரணம் எனற்னர்.

ஆனால் காமராஜோ நாம் தோற்றது‍ உண்மை.  உண்மையை ஏற்றுக் கொள்வதுதான் நேர்மையான அரசியல்.  ரஷ்ய மை அது‍ இதுன்னு‍ சமாதானஞ்‍ சொல்றது‍ சரியில்லேன்னேன்.  இந்த அரசியல் ஜனங்களிடம் எடுபடாதுன்னேன் என சமாதானம் கூறினார்.

1967ல் மக்கள் தீர்ப்பை எப்படி‍ மனங்கோணாமல் அவர் ஏற்றுக் கொண்டாரோ, அதே பெருந்தன்மையுடன் 1971ல் தனக்கு‍ எதிராக அளித்த தீர்ப்பையும் தலை வணங்கி ஏற்றுக் கொண்டார்.

 - தமிழருவி மணியன்
    அடிமனத்தின் சுவடுகள் நூலிலிருந்து‍.

2 comments:

  1. இடுகைக்கு பாராட்டுகள் இருந்தாலும் ஒரு ஐயம் இப்போது தோற்று போனது காமராசர் போன்றவர் என்று சொல்லுகிறீர்களா அப்படி தொரியவிலையே

    ReplyDelete
  2. நீண்ட நாட்களாக இந்த இடுகையை போட வேண்டும் என நினைத்திருந்தேன். அதற்கான நேரம் இப்போது‍தான் வாய்த்தது. வேறொன்றுமில்லை.

    ReplyDelete