Tuesday, May 10, 2011

அஞ்சறைப் பெட்டி‍

மனைவியின் சொந்த கிராமத்திலிருந்து‍ போன்.  தன் அம்மாவுடன் வழக்கமான உரையாடல்களுக்குப்‍ பிறகு‍, என் பாரியாள் அதி்ர்ச்சி கலந்த குரலில், அப்படியா!, எப்போ? எப்படி?  அடக் கடவுளே! என்று‍ உச் கொட்ட என்ன, ஏது‍ வென்று‍ நான் பதற்றமானேன்.  போனை வைத்து‍ விட்டு‍ விஷயத்தை சொல்ல சொல்ல நானும் மேற்கண்ட அதி்ர்ச்சி சொற்களை உதிர்க்க ஆரம்பித்தேன்.  விஷயம் இதுதான்.

தன் அம்மா வீட்டுக்கு‍ பக்கத்து‍ வீட்டில் ஒரு‍ கூட்டுக் குடும்பம் வசிக்கிறது.  அக்குடும்பத்தின் இரண்டாவது‍ மருமகள் நாயால் இறந்து‍ விட்டார்.  அவருக்கு‍ பத்து‍ மற்றும் எட்டு‍ வயதில் இரு‍ பெண் குழந்தைகள்.  கணவர் விவசாயி.  கவனிக்க நாய் கடியால் அல்ல.  நாயால். 

குழம்ப வேண்டாம்.  அந்த பெண்ணின் கணவரை சில மாதங்களுக்கு‍ முன்பு ஒரு‍ நாய் கடித்திருக்கிறது.  இவரும் ஏதோ நாட்டு‍ மருந்தை  உட்கொண்டு‍ விட்டு, அதீத நம்பிக்கையில் தனக்கு‍ ஏதும் நேராது‍ என்று‍ எண்ணி அசட்டையாக விட்டுவிட்டார்.  சில நாட்களில் அந்த நாயும் இறந்து‍ விட்டதாம்.  அப்பவும் எந்தவித மேல்சிகிச்சையும் எடுக்காமல் இருந்திருக்கிறார். 

ஆனால் விதி வேறு‍ வகையில் விளையாடி‍யிருக்கிறது.  ஆமாம் இவரின் உயிரணு‍ மூலம் அவர் மனைவிக்கு‍ அந்த கிருமி சென்று‍ அவரின் உயிரை எடுத்துவிட்டது.  உயிர் போகும் நாள் வரை எந்தவித அறிகுறியும் இல்லையாம்.  இறுதி நாளன்று‍ நாயைப் போலவே பிராண்டுவது, இரைப்பது, வாயில் நீர் வடிவது‍ என பல சிரமத்தை அந்த பெண் அனுபவித்து‍ விட்டு, 108லேயே உயிரை வி்ட்டுவிட்டாராம்.

அடுத்த லீவுக்கு‍ உங்க ஊருக்கு‍ வரணும். அப்படியே ஊட்டிய சுத்தி பார்க்கணும் என்ற போன வாரம் நாங்கள் ஊருக்கு‍ போயிருந்த போது‍ அந்தப் பெண் ஆசையாசையாக கூறியது‍ இன்னும் காதில் ஒலித்துக் கொண்டு‍ இருக்கிறது.

****************************

வங்கியில் கடைசி இருப்பாக இருந்த நூறு‍ ரூபாய்க்கும் ஒரு‍ செலவு வந்து‍ விட, அதை எடுக்க ATM வாசலில் நின்று‍ கொண்டிருந்தேன்.  உள்ளே சென்ற ஒரு‍ பெண் நீண்ட நேரமாக மெசினுடன் போராடிக் கொண்டிருந்தார்.    பின்னர் ஒரு‍ மாதிரி குழப்பமான முகத்துடன் வெளியே வந்தவர் வங்கிக்குள் சென்றுவிட்டு‍ மீண்டும் கோபத்துடன் வெளியே வந்தார்.  பக்கத்திலிருந்த மற்றொரு‍ பெண் என்ன ஆச்சுங்க எனக் கேட்க விஷயத்தை சொன்னார்.   ஏடியெம் கார்டை செருகி, கோட் நம்பரை அடித்து‍ விட்டு‍, தொகையையும் குறிப்பிட்ட பின்னர் பணம் வராமல், வெறும் ஸ்டேட்மென்ட் மட்டும் வந்திருக்கிறது.  சரி அதனால் என்ன பிரச்சினை என்கிறீர்களா?

வெறும் நூறுரூபாய்க்கெல்லாம் ஏடியெம் வாசலில் நிற்கும் என் போன்ற பிரகஸ்பதி்க்கெல்லாம் இது‍ பகீர் நிகழ்வுதான்.  ஆமாம் பணத்தை எடுத்தது‍ போல கழித்து‍ காட்டி‍ விட்டு‍, மீதி உள்ள தொகைக்கு‍ மட்டும் ஸ்டேட்மென்ட் வந்திருக்கிறது.  தொகையை எடுத்தது‍ போல டெபிட் செய்திருக்கிறது‍ அந்த ஏடியெம்.

வேறொரு‍ வங்கியின் அட்டையை இந்த வங்கி ஏடியெம்மில் நுழைத்ததால் இந்தப் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம்.   எனவே அந்த வங்கியிடமே புகார் தெரிவியுங்கள் என வங்கி அலுவலர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் சொல்லியிருக்கிறார்.


**************************

1 comment:

  1. வெறும் நூறுரூபாய்க்கெல்லாம் ஏடியெம் வாசலில் நிற்கும் என் போன்ற பிரகஸ்பதி்க்கெல்லாம் இது‍ பகீர் நிகழ்வுதான். ஆமாம் பணத்தை எடுத்தது‍ போல கழித்து‍ காட்டி‍ விட்டு‍, மீதி உள்ள தொகைக்கு‍ மட்டும் ஸ்டேட்மென்ட் வந்திருக்கிறது. தொகையை எடுத்தது‍ போல டெபிட் செய்திருக்கிறது‍ அந்த ஏடியெம்.


    ..... என்ன கொடுமைங்க! :-(

    ReplyDelete